search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் அதிபர் கைது"

    • சென்னையில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.
    • மும்பையில் விமானம் தரை இறங்கியபோது தொழில் அதிபர் தர்ஷன் பரேக்கை போலீசார் கைது செய்தனர்.

    மும்பை:

    சென்னையில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அதில் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் தர்ஷன் பரேக் பயணம் செய்தார். அவர் விமானத்தில் ஏறியதும் ரகளையில் ஈடுபட்டார்.

    குடிபோதையில் இருந்த அவர் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மற்ற பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மும்பையில் விமானம் தரை இறங்கியபோது தொழில் அதிபர் தர்ஷன் பரேக்கை போலீசார் கைது செய்தனர்.

    • சேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 200 பவுன் நகைகளை எடுத்து சென்று காதலி சுவாதியிடம் கொடுத்துள்ளார்.
    • சுவாதி சொந்தமாக வீடு வாங்க உள்ளதாகவும், அதற்கு ரூ.70 லட்சம் குறைவாக உள்ளதாகவும் சேகரிடம் கூறினார்.

    சென்னை:

    சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவருடைய மகன்கள் சேகர் (வயது 41), ராஜேஷ் (37). இருவருக்கும் திருமணமாகி தாயுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லியில் இனிப்பு கடை நடத்தியும், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் சேகரின் தாய் தமிழ்ச்செல்வி புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகன் சேகர் வீட்டில் இருந்த 550 பவுன் நகைகளை திருடி அவரது கள்ளக்காதலியிடம் கொடுத்து விட்டதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

    இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் சேகர் மற்றும் அவரது காதலி சுவாதி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் காதலியிடம் தொழில் அதிபர் நகை-பணத்தை பறிகொடுத்தது எப்படி? என பல சுவாரசியமான தகவல்கள் அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

    தொழில் அதிபர் சேகரின் மனைவிக்கு இருதய பிரச்சினை இருப்பதால் அவர், வேறு சில பெண்களுடன் பணம் கொடுத்து உல்லாசமாக இருப்பதற்காக தரகரை அணுகினார். அப்படி அவருக்கு பழக்கமானவர்தான் 22 வயதான சுவாதி. இவர் மாடலிங் செய்து வருவதுடன், பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

    ஒரு ஆணுடன் இரவில் தங்குவதற்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்துள்ளார். சேகர் ஆசைப்படும்போதெல்லாம் சுவாதியை போரூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து விட்டு ரூ.15 ஆயிரத்தை கட்டணமாக செலுத்தி உள்ளார். சுவாதியின் அழகில் மயங்கிய சேகர், அவரை நிரந்தரமாக தன்னுடன் வைத்து கொள்ள ஆசைப்பட்டார். இதனால் அடிக்கடி சுவாதியை உல்லாசத்துக்கு அழைத்து பணம் கொடுத்து வந்தார். அவரிடம் பணப்புழக்கம் இருப்பதை அறிந்த சுவாதி, தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து, திருமணமாகவில்லை என்று கூறி சேகருடன் கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

    இருவரும் அடிக்கடி கோவா, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். சேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 200 பவுன் நகைகளை எடுத்து சென்று காதலி சுவாதியிடம் கொடுத்துள்ளார். இதையறிந்த சேகரின் தாய், சுவாதியிடம் சென்று அந்த 200 பவுன் நகைகளை மீட்டு வந்தார்.

    அதன்பிறகும் சுவாதியுடனான தொடர்பை கைவிடாத சேகர், தனது மனைவி, தாய் என குடும்பத்தினரின் நகைகளை திருடி காதலிக்கு பரிசளித்து உள்ளார். சுவாதிக்கு இதுவரை சேகர் 550 பவுன் நகைகளையும், ரூ.30 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் சுவாதியுடன் வெளியே சென்று வருவதற்காக கார் ஒன்றையும் வாங்கி கொடுத்தது தெரிய வந்தது.

    சேகரிடம் அதிக அளவில் பணம் இருந்ததாலும், கேட்கும்போது எல்லாம் பணம், நகையை கொடுத்ததாலும் சேகரை ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் இருந்து நகை, பணத்தை சுவாதி கறந்துள்ளார். மேலும் சொந்தமாக வீடு வாங்க உள்ளதாகவும், அதற்கு ரூ.70 லட்சம் குறைவாக உள்ளதாகவும் சேகரிடம் கூறினார். அந்த பணத்தை கொடுக்கவும் சேகர் ஏற்பாடு செய்து வந்தார்.

    சேகர் அளித்த பணம், நகை ஆகியவற்றை வைத்து கொண்டு சுவாதி தனது ஆண் நண்பர்களுடன் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளார். சேகர், காதலியுடன் தாய்லாந்து செல்வதற்காக பாஸ்போர்ட், சுற்றுலா விசா ஆகியவற்றை எடுத்து இருந்தார். ஆனால் அதற்குள் இருவரும் போலீசில் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் தனது காதலியுடன் சேகர் அதிக அளவில் நகை, பணம் கொடுத்து இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் சுவாதியிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர், சேகர் தன்னிடம் நகை, பணம் எதுவும் கொடுக்கவில்லை என கூறிவிட்டார். இதனால் சுவாதியை அவரது வக்கீல்கள் மூலம் வரவழைத்து அவரை மிரட்டி நகையை வாங்க முடிவு செய்தனர். ஆனால் அந்த திட்டம் பலிக்காததால் அதன்பிறகே சேகரின் தாய், போலீசில் புகார் செய்து உள்ளார். இதனால் சேகரின் தாய் மற்றும் அவரது தம்பி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்து உள்ளனர். அதேநேரத்தில் சுவாதி, சேகர் தன்னிடம் கொடுத்த நகைகளை எல்லாம் அவரது குடும்பத்தினரே தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி எடுத்துச்சென்று விட்டதாக போலீசில் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
    • சேகரின் தம்பி கொடுத்த புகாரின் பேரில் சேகர், காதலி சுவாதி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர்(40). இவர் தனது தம்பி மற்றும் தாயுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இவருக்கு பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே ஸ்வீட் கடை உள்ளது. மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்தார். இதனால் நல்ல வருமானம் கிடைத்து வந்தது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

    அப்போது பீரோவில் வைத்துச்சென்ற அவரது 300 பவுன் நகை மாயமாகி இருந்தது.

    இதேபோல் சேகரின் தாயின் 200 பவுன் நகை மற்றும் 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நகை மாயமானது குறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். பீரோ உடைக்கப்படாமல் 550 பவுன் நகை திருடு போய் இருந்ததால் வெளியில் இருந்து வந்து மர்ம நபர்கள் திருட வாய்ப்பு இல்லை என்பதை போலீசார் முதலில் உறுதி செய்தனர்.

    இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சேகர் வீட்டில் இருந்த 550 நகைகளை சிறுக சிறுக, திருடி தனது கள்ளக்காதலியான வேளச்சேரி கேசரிபுரம் பகுதியை சேர்ந்த சுவாதி என்பவரிடம் பரிசாக கொடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சேகரின் தம்பி கொடுத்த புகாரின் பேரில் சேகர், காதலி சுவாதி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    சேகருக்கு தனது மனைவி பிரிந்து சென்ற பின்னர் நண்பர் ஒருவரது மூலம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இதனை பயன்படுத்தி தனது வலையில் சேகரை அவர் வீழ்த்தி உள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது சேகரிடம் இருந்து நகைகளை சுவாதி வாங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் நகைகேட்டு அவர் அன்பு தொல்லை கொடுத்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சேகர் வீட்டில் இருந்த மனைவி மற்றும் தாயின் நகைகளை யாருக்கும் தெரியாமல் திருடி காதலிக்கு பரிசாக கொடுத்து மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.

    வீட்டில் எப்போதும் போல் சேகர் வந்து சென்றதால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. மேலும் பீரோவில் இருந்த நகைகளை அவர்கள் சரிபார்க்காததும் சேகருக்கு வசதியாக இருந்தது. மொத்தம் 550 பவுன் நகையை வீட்டில் இருந்து திருடி சேகர் கொடுத்து இருக்கிறார்.

    இதேபோல் லட்சக்கணக்கில் சுவாதி பணம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சேகர், காதலி சுவாதி ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை எழும்பூர் நட்சத்திர ஓட்டலில் ரூ.17½ லட்சம் வாடகை பாக்கி தொடர்பாக தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை எழும்பூர் காந்தி - இர்வின் சாலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சக்திவேல் என்ற தொழில் அதிபர் தங்கி இருந்து வந்தார். இவர் இந்த ஒட்டலின் வாடிக்கையாளர் என்பதால் அவருக்கு ஓட்டலில் ஒரு அறை ஒதுக்கப்பட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் அவர் இந்த ஓட்டலில் தங்கி இருந்தார். அதற்காக முன் பணமாக ஒரு தொகையையும் கொடுத்திருந்தார். அந்த பணத்தில் இருந்து அவரது வாடகை தொகையை கழித்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர் திடீரென்று நிர்வாகத்துக்கு தெரியாமல் ஓட்டல் அறையை காலி செய்து சென்று விட்டார்.

    இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் அவர் செலுத்த வேண்டிய வாடகை தொகையை கணக்கீட்டு பார்த்த போது அவர் ரூ.17½ லட்சம் வாடகை பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஓட்டல் மானேஜர் முத்துக்குமார் கடந்த மாதம் எழும்பூர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் தொழில் அதிபர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    தக்கலையில் வாகன சோதனையில் இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்த தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
    தக்கலை:

    தக்கலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் தக்கலை பழைய பஸ் நிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த கார், இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து போக்குவரத்து விதிமுறைகளை கடை பிடிக்கிறார்களா? என்று சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த கிங்சிலிராஜ்(வயது34) என்ற தொழில் அதிபர் இருந்தார். அவர் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டி வந்ததால் அவரிடம் இன்ஸ்பெக்டர் நடராஜன் அது பற்றி கேட்டார். மேலும் ஆவணங்களையும் அவர் சோதனை செய்தார்.

    இதனால் இன்ஸ்பெக்டருக்கும், தொழில் அதிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில் அதிபரின் கார் நடு வழியில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றி இன்ஸ்பெக்டர் நடராஜன் தக்கலை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தான் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கிங்சிலிராஜ் தன்னை அவதூறாக பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்துகொலை மிரட்டல் விடுத்ததாக கூறி இருந்தார்.

    இந்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் கிங்சிலிராஜை கைது செய்தனர். மேலும் அவர் பயணம் செய்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம்பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றி செக்ஸ் சித்ரவதை செய்த சென்னை தொழில் அதிபர் மற்றும் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    பாங்காக்கை சேர்ந்தவர் நருமோன் ஜபாய் (26). இவர் அங்கு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடன் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ஜெயின் (43) என்ற தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கடந்த 2011-ம் ஆண்டு ஜெயின் பாங்காக் சென்றிருந்த போது இருவரும் சந்தித்து கொண்டனர். இதன் பிறகு 2 பேரும் பழகினர். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜெயின் ஜபாயை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே ஜபாய் 2 குழந்தைகளுக்கு தாய் ஆனார். இருவரும் பாங்காக்கில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். இதில் ஜெயினின் நண்பர் சந்தோசும் கையெழுத்திட்டுள்ளார்.

    இதன் பின்னர் ஜெயின், ஜபாயுடனான நெருக்கத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் செக்ஸ் சித்ரவதை செய்ததாகவும் தெரிகிறது.

    இதுபற்றி ஜபாய் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பினார். தாய்லாந்து தூதரகத்தின் உதவியையும் நாடினார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஜபாயின் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சவுகார்பேட்டை சேர்ந்த ஜெயின் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் கோத்தாரி என்பவர் மீதும் ஜபாய் செக்ஸ் குற்றச்சாட்டை கூறி இருந்தார். இதனை தொடர்ந்து அவரும் கைதானார்.

    இதற்கிடையே தனது 2 குழந்தைகளுக்கும் ஜெயின்தான் தந்தை என்று ஜபாய் கூறி உள்ளார். இது தொடர்பாக ஜெயினுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஜெயினின் இன்னொரு நண்பரான சந்தோசை போலீசார் தேடி வருகிறார்கள். #Tamilnews
    ×